Latestமலேசியா

ஸாக்கிரின் கூற்று; சிந்தனைக்கு எட்டாத கற்பனை – இராமசாமி 

கோலாலம்பூர், ஆக 13 – இதற்கிடையில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் ஸாக்கிர் நாய்க்கின் கூற்றை சாடியுள்ளார். மலேசிய இந்துக்கள் இந்தியாவின் முஸ்லிம்களை விட பல மடங்கு கூடுதல் உரிமை பெற்றுள்ளதாக ஸாக்கிர் நாய்க் எந்த அடிப்படையில் ஒப்பீடு செய்துள்ளார் என ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியாவில் மலாய்காரர்களுக்கு அரசியலமைப்பில் சில கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் மலேசிய இந்துக்கள் அல்லது மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு அவ்வாறான சலுகைகள் இல்லை. இதில், இந்திய அரசியலமைப்பு மாறுபட்டுள்ளது.

நிலைமை  இவ்வாறு இருக்க, மலேசிய இந்துக்கள்  இந்தியாவின் முஸ்லிம்களை விட கூடுதல் சலுகைகள் பெற்றுள்ளதாக சிந்தனைக்கு எட்டாத கற்பனையில், ஸாக்கிர் நாய்க் ஒப்பீடு செய்திருப்பதாக ராமசாமி தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker