மலேசியா

ஸாக்கிர் நாயக் இன வாதத்தைத் தூண்ட வேண்டாம் – பேட்ரியோட்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 13 – மலேசியர்களைத் தூண்டி இன மோதலை உருவாக்குவதைத் தவிர்க்க, ஸாக்கிர் நாயக் தமது வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென பேட்ரிரோட் எனப்படும் தேசிய விசுவாசக் கழகத்தின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல்(ஓய்வு) முகமட் அர்ஷாட் ராஜி கேட்டுக் கொண்டார்.

கோத்தா பாருவில் பேசிய ஸாக்கிர் நாயக் இந்தியர்களின் நாட்டின்பால் இருக்கும் நாட்டுப் பற்றின் மீது சந்தேகத்தை எழுப்பி இருப்பது வேண்டத்தகாதது.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் யூகுர் இனத்தவர்களின் மீதான அடக்குமுறையைக் குறிப்பிட்ட ஸாக்கிர், அது சீனாவுடனான மலேசியாவின் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யூகுர் போன்ற உணர்ச்சிகரமான விவகாரத்தை வெளியுறவு அமைச்சிடமே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஸாக்கிர் எதுவும் பேசாமல் இருக்க வேண்டுமென முகமட் அர்ஷாட் கேட்டுக் கொண்டார்.

ஸாக்கிர் மதப் பிரசாரத்தையே செய்தால், பேட்ரியோட்டுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், இங்கு மதங்களை ஒப்பிட்டுப் பேசுவது நாட்டின் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

முந்தைய அரசாங்கம் 2013இல் ஸாக்கிருக்கு நிரந்தர அந்தஸ்து உரிமையைக் கொடுத்தது. 1எம்டிபி நிதி முறைகேட்டை திசை திருப்பவே அப்படி செய்யப்பட்டது.

அவரை நாடு கடத்த வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்ட பின்னர், அவரின் பிரசார வியூகம் மாற்றப்பட்டு அரசியல் மற்றும் அனைத்துலக் விவகாரத்தை அவர் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்தியர்களின் விசுவாசம் சீனாவின் நட்பு போன்றவற்றை தொட்டுப் பேசுவதால் அவர் ஒரு பண்பாடற்ற கல்விமானாக இருப்பதைப் புலப்படுத்துகிறது.

இந்தியர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பியதன் மூலம் ஸாக்கிர் அவர்களின் அர்ப்பணிப்பை உணரவில்லை, நேர்மையற்றவர், சொந்த உள்நோக்கம் கொண்டவராகக் காட்டிக் கொண்டுள்ளார்.

இந்தியர்களின் விசுவாசம் கேள்விக்குரியதாக ஆக்கப்படக் கூடாது. இந்த நாட்டுக்காக பல்லாயிரம் இந்தியர்கள் இன்னுயுரை ஈந்துள்ளனர்.

ஊழல் வழக்கில் தேடப்படும் ஸாக்கிரை அங்கு அனுப்ப இங்கு எதிர்ப்பு வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது. அது பொய்யான குற்றச்சாட்டு என கூறும் தலைவர்களும் உள்ளனர்.

அவரால் நாட்டுக்குக் கெடுதல் நேரும் என ஒப்புக் கொள்ளும் வேலையில், அவரை நாடு கடத்துவதற்கு தயக்கம் காட்டப்படுவது ஏன் என அர்ஷாட் ராஜி கேள்வி எழுப்பினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker