Latestமலேசியா

ஸாக்கிர் நாய்க் கொல்லப்படலாம்; எனவே அவர் இங்குதான் இருப்பார் – மகாதீர்

சிப்பாங், ஆகஸ்ட் 13 – ஸாக்கிர் நாய்க்கை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடியாது. அவர் அங்கு அனுப்பப்பட்டால் அவர் கொல்லப்படலாம் என பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.

ஸாக்கிர் நாய்க் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படாமல் தொடர்ந்து மலேசியாவில் இருப்பதற்கு தனது அமைச்சரவையிலும் நடப்பு அரசாங்கத்திலும் எதிர்ப்பு வந்தாலும், ஸாக்கிர் நாய்க் இங்குதான் இருப்பார் என  பிரதமர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஆனால் வேறெந்த நாடாவது அவரை ஏற்றுக் கொள்ள முன்வந்தால் அதை வரவேற்பதாக இன்று கோலாலம்பூர் விமான நிலையத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்ட மகாதீர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் மலேசிய பிரதமரைக் காட்டிலும், மலேசிய இந்துக்களுக்கு இந்திய பிரதமர் மீது விசுவாசம் அதிகம் என ஸாக்கிர் நாய்க் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஸாக்கிர் நாய்க்கின் கூற்றை நீங்கள் உண்மை என நம்புகிறீர்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “அது எனக்கு எப்படி தெரியும், அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என மகாதீர் பதிலளித்துள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker