Latestமலேசியா

ஸாக்கிர் விவகாரம் – அமைச்சரையில் முன்வைப்பேன் – குலா

கோலாலம்பூர்,ஆக 13-  மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ள சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனித வள அமைச்சர் குலசேகரன் கேட்டு கொண்டுள்ளார். ஸாக்கிர் நாய்க்கின் கூற்று மலேசியவாழ் பல்லினத்தவர்களின் உணர்ச்சியை தூண்டும் செயலாக உள்ளது.

மலேசியாவின் வரலாற்றை முழுமையாக அறியாத வெளிநாட்டவரான ஸாக்கிர் நாய்க் மலேசியர்களை தரக்குறைவாக பேசுவதும் விசுவாசத்தைப் பற்றி கேள்வி எழுப்புவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நிரந்தர குடியுரிமை தகுதிகொண்டவராக அவர் காணப்படவில்லை . இந்த விவகாரம் பற்றி அமைச்சரவையில் தாம் பேசவுள்ளதாக குலசேகரன் கூறியுள்ளார்.

ஸாக்கிர் நாய்க் ஒருவரால் மலேசியர்கள் பிளவுபட அனுமதிக்க கூடாது .நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட மலேசியர்கள் ஒன்றுபட வேண்டும். இந்தியாவால் தேடப்பட்டு வரும் ஸாக்கிர் நாய்க் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு  அந்நாட்டின் நிதி மோசடி மற்றும் தீவிரவாதம் தொடர்பான குற்றசாட்டுகளை சந்திக்க வேண்டும் எனவும் குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker