Latestமலேசியா

தாய்லாந்து கார் விபத்தில் ஐவர் கொல்லப்பட்டனர் – மலேசியப் பெண்மணி தடுத்து வைப்பு  

சொங்ஹ்லா, ஆகஸ்ட் 14 – நேற்று மதியம் தாய்லாந்து, சொங்ஹ்லா அருகே , மலேசிய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் சாலை ஓரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புல் வெட்டும் தொழிலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வாகனத்தை செலுத்தியது 30 வயது மலேசிய மாது என்று தெரியவந்துள்ளது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிராபியிலிருந்து ஹத்தாய்க்கு புரோடுவா மைவியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென்று அவர் செலுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்ததால், ஹத்தாய்- Satun சாலை அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  ஆறு புல் வெட்டும் தொழிலாளர்களை மோதியுள்ளார்.

அந்த விபத்தில்,  ஐவர் சம்ப இடத்திலேயே பலியாகினர். மேலும், ஒருவர் ரத்தபூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ரத்தபூம் மாவட்ட குற்றப்புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த ஐவரும் 34 முதல் 56 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை செலுத்திய அந்தப் பெண்மணிக்கும் அவரின் நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சம்பந்தப்பட்ட மலேசிய பெண் ஓட்டுனர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker