Latestமலேசியா

வார்த்தை கவனம்; உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் – மஸ்லிக்கு சந்தியாகோ 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – நாட்டின்  முக்கியாமன விஷயங்களில் அதிலும் குறிப்பாக இன உணர்வு தொடர்பான அம்சங்களில் பிரதமர் மகாதீர் ஒரு தலைபட்சமாக முடிவெடுக்கிறார்  என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறியது அப்பட்டமான பொய் என கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அவர் பேசும் வார்த்தையில்ல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அவருடைய வேலையை சரியாக செய்தாலே போதுமானது என சார்ல்ஸ் சந்தியாக பதில் அளித்துள்ளார்.
என்னை பொய்க்காரர் எனக் கூறியுள்ளது மிகக் கடுமையான குற்றச்சாற்று என்றும் சார்ல்ஸ் சாடியுள்ளார். நாம் மக்களால் உருவாக்கப்பட்ட புதிய மலேசியாவில் இருக்கிறோம்.  அரசாங்க முடிவுகளில் மக்களின் குரல் பிரதிபலிக்க வேண்டும்.
நான் தவறு என நிருபியுங்கள், தற்காத்து பேசுவது என்றுமே எளிதான ஒன்றுதான்”
அதற்கு முன்பு கல்வி அமைச்சில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் சரி செய்யப்பட வேண்டும்  என சார்ல்ஸ் கூறியிருக்கிறார்
இதற்கிடையில், காட், ஸாக்கிர் நாய்க் போன்ற விவகாரங்களில் பிரதமரின் முடிவு பக்காதான் ஹராப்பன் தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் பிரிவினையும் ஏற்படுத்தியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 
Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker