Latestமலேசியா

சரவாக்கிற்குள் நுழைய ஸாக்கிருக்குத் தடை !

சிபு, ஆகஸ்ட் 15 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க்கை சரவாக் மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் டான் ஶ்ரீ ஜேம்ஸ் ஜெமுட் மாசிங், மாநில உள்ளாட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சர் டத்தோ டாக்டர் சிம் குய் ஹியன் ஆகியோர் மாநில அரசாங்கத்தின் இந்த முடிவினை உறுதிப்படுத்தியுள்ளனர் என உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸாக்கிரின் இனவாத பேச்சு சரவாக் மாநில மக்களின் அமைதியையும் ஒற்றுமையையும் சீக்குலைத்து விடும். எனவே அவர் இம்மாநிலத்திற்குள் நுழைவதை நாங்கள் தடை செய்கிறோம் என மாசிங் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker