Latestமலேசியா

சமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் –  சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO

ஷா ஆலம், ஆகஸ்ட் 17 – சமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும், அதே சமயத்தில் சுயகாலில் நிற்கும் வகையில் வருவாய் ஈட்டிக் கொள்வது எப்படி, ஆலயத்தின் முறையான பதிவுகளை எப்படி செய்துக் கொள்வது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 6ஆம் ஆண்டு சிலாங்கூர் ஆலயங்கள் மாநாடு இன்று ஷா ஆலாமில் நடந்தது.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்து தர்ம மாமன்றம் ஆகியோரின் ஆதரவில் நடைப்பெற்ற இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநிலத்தில் செயல்படும் ஆலயங்களின் சுமார் 1000 பேராளர்கள் கலந்துக் கொண்டனர்.
2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் சிலாங்கூர் அரசு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துப வருவதாக இந்நிகழ்வை தொடக்கி வைத்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்தார்.
ஆலயங்கள் தங்களது கணக்கு வழக்குகளை முறையாக நிர்வகிப்பது அவசியம் என்றும் அப்படி செய்தால் மட்டுமே மாநில அரசாங்கத்தின் மானியத்தை வரும் காலங்களில் பெற முடியும் என்றும் கணபதிராவ் விளக்கினார்.
இந்த நிகழ்வில் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான், முத்துக்குமார் சிவச்சாரியார், செந்தோசா சட்ட்மன்ற உறுப்பினர் குணராஜ், புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ், அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, ஆலயங்கள் பொதுவாக எதிர்நோக்கும் ஆலய பதிவு பிரச்சனை மற்றும் வரி விலக்கின் மூலம் நன்கொடையை எப்படி பெருக்கிக் கொள்வது தொடர்பிலும் விளக்கமளிக்க மலேசிய சங்க பதிவிலாகாக்க அதிகாரிகளும் வருமான வரி துறை அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராளர்களுக்கு விளக்கமளித்தனர்.
ஆலய நிர்மாணிப்புகளோடு முறையான நிர்வாகத்திற்கும் சமூக பணிகளை நேர்த்தியாக மேற்கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட விஷயம் நாடளாவிய நிலையில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் பொருந்தும் என்பது கலந்துக் கொண்ட பேராளர்களின் கருத்து.     

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker