Latestசினிமா

செம கட்டு கட்டிவிட்டு ஸ்டாண்ட் கலைஞர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்! 

சென்னை,ஆக.17- நேர்கொண்ட பார்வை வெளியான எட்டே நாட்களில் பல தமிழ் சினிமா ரெக்கார்ட்களை உடைத்து வரும் அஜித் தொடர்பான மேக்கிங் வீடியோக்களை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .

அதில் சண்டைக்காட்சி ஒன்றில் ஷாட் முடிந்ததும் ஸ்டண்ட் கலைஞர்களிடம் அஜித் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நேர்கொண்டபார்வை வெளியாகி 8 நாட்கள் ஆன நிலையில் சென்னையில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபீஸ் வசூல் குவித்தது .உலகம் முழுவதும் வெளியான இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கொடுத்துள்ள நேர்கொண்டபார்வை படத்திற்கு, சூர்யா ,ஜோதிகா, ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .

மாபெரும் உற்சாகத்தில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் புராணம் பாடிய படி இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள தீ முகம் தான் என்ற பாடலின் போது அதில் சண்டையிடும் காட்சிகள் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது .அதை அசால்ட்டாக துணிந்து அஜித் சண்டையிடும் காட்சிகளுக்குப் பிறகு கீழே விழுந்தவரை தூக்கி விடும் காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker