Latestமலேசியா

நண்பர்கள் கொல்லப்பட்டனர், தோழிகள் கற்பழிக்கப்பட்டனர் – ரோபர்ட் குவோக்

கோலாலம்பூர், ஆக. 17 – ஜப்பானியர் ஆட்சி காலத்தில் அனுபவித்த பல்வேறு துன்பங்களைப் கஷ்டங்களைப் பற்றி கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஒசாக்காவின் அஷாஹி சிம்புனுக்கு அளித்த பேட்டியில், ஒரு சிறுமி ஜப்பானியர்களால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து ஆங்கிலோ இந்திய குடும்பம் அதனைக் கடுமையாக எதிர்த்தபோது, அந்தக் குடும்பத்தோடு ஓர் இந்திய நண்பரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே போன்று, என் ஆசிரியர் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டனர்.

சீனாவில் நடந்த போருக்கு நிவாரண நிதி திரட்டிய ஜோகூரைச் சேர்ந்த மாணவ நண்பர்கள் ஜப்பானியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பள்ளி மாணவிகள் கற்பழிக்கப்பட்டு குடும்பத்தினரோடு கொன்று புதைக்கப் பட்டனர். சீனாவுக்குச் சென்ற அவர்களின் இரு புதல்வர்கள் மட்டும் உயிரோடு தப்பினர்.

போதுமான உணவின்றி மக்கள் தவித்தனர். பேசும் எழுதும் சுதந்திரம் அறவே இல்லை. எதிர்ப்பு தெரிவித்தோர் மீடு அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு விலங்குகள் போல் நடத்தப்பட்டனர். கொடுங்கோல் அராஜம் தலைவிரித்து ஆடியது என அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானியர்கள் பெரும்பாலும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள். ஆனால், அவர்களில் சில புல்லுருவிகள் மட்டுமே கிரிமினலாகச் செயல்பட்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஜப்பானிய அரசு பிரிட்டிஷ் மலாயாவை 1941லிருந்து 1945 வரை ஆட்சி செய்தது. கூட்டுப் படைகளிடம் ஆட்சியை இழந்த பின்னர், நாட்டுக்கு 1957இல் சுதந்திரம் கிடைக்கும் வரை பிரிட்டிஷாரின் வசம் இருந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர், வட போர்னியோ என்றழைக்கப்பட்ட சபா, சரவாக்கும் சேர்ந்து 1963இல் மலேசியாவை உருவாக்கின.

சீனிக்கு ராஜா என்றழைக்கப்படும் ரோபர்ட் குவோக் உலகின் 104ஆவது கோடீஸ்வரராகத் திகழ்கிறார். ஹாங்காங்கில் வசிக்கும் அவர் மகாதீர் அமைத்த மேன்மக்கள் ஆலோசனை மன்றத்தில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker