Latestமலேசியா

நோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்

சிரம்பான், ஆக. 17 – நோரா ஆன் குவோரின் குடும்பத்தினர் துவாங்கு ஜாபார் மருத்துவமனையிலிருந்து அவரின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதை அடுத்து, பிரேதம் பிற்பகல் 12.42 மணியளவில் தடயவியல் இலாகாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே நோரா இறந்ததாகச் சொல்லப்படும் காரணங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தங்களது மகள் குழப்பத்தை ஏற்படுத்துக் சூழ்நிலையில் மரணமடைந்ததாகச் சொல்லப்படுவதில் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லப்படவில்லை.

அவள் காணாமல் போய் 10 நாள்களில் நடந்த நிகழ்ச்சிகள் என்னவென்பது புரியவில்லை. எனவே, அதற்கான பதில்களைத் தெரிந்து கொள்ள தாங்கள் மிகுந்த ஆவலாக இருப்பதாக அக்குடும்பம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker