Latest

ஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா

கோலாலம்பூர், ஆக 17-  மனிதவள அமைச்சர் குலசேகரன் 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்த ஸாக்கிர் நாய்க் உடனே தம்மீது வழக்கை தொடரட்டும் என ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் குலசேகரன் பதிலளித்துள்ளார்.

தம்முடைய பதிலுக்கு காத்திருக்காமல் தம்மீது வழக்கை பதிவு செய்யலாம் எனவும் இது தொடர்பில் எந்த சவாலையும் சந்திக்கத் தயார் எனவும் கூறியுள்ளார்.
‘நான் பிற நாட்டுக்கு தப்பியோடி அடைக்கலம் தேடப் போவதில்லை. வேலை முடிந்ததும் என் தாய் நாட்டிற்கு திரும்பி என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை எவ்வித பயமுமின்றி சந்திப்பேன்.

இந்நாட்டை தற்காக்க என்னை வாக்களித்த மக்கள் நம்பியிருக்கின்றனர். அவர்கள் சார்பில் மலேசியர்களுக்கு எதிரான உணர்வை தூண்டும் முயற்சிகளை எதிர்கொண்டு சந்திக்கும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன் என குலசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker