Latestமலேசியா

ஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – ராமசாமி

பெட்டாலிங் ஜெயா, ஆக. 17 – ஸாக்கிரை எதிர்க்கும் ஐவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும் நீதிமன்றத்தில் அவரைச் சந்திக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி குறிப்பிட்டார்.

அவர்களுக்கு எதிரான போலீஸ் புகார் ஷா ஆலம் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கடிதம் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பப்படும்.

ஆகஸ்டு 8இல் கோத்தா பாருவில் தாம் பேசிய உரையை தவறாகப் புரிந்து கொண்டு அவர்கள் கடுமையாக விமர்சிப்பதை அடுத்து ஸாக்கிர் போலீசில் புகார் செய்தார்.

ஸாக்கிர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் மிகுந்த ஆவலாக இருப்பதாக ராமசாமி குறிப்பிட்டார்.

இதனிடையே, சார்லஸ் சந்தியாகோ, போலீஸ் புகாரைச் செய்ய ஸாக்கிருக்கு சகல உரிமையும் உண்டு. தாம் போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பைத் தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஸாக்கிருக்கு எதிராக 100க்கும் அதிகமான போலீஸ் புகாகள் அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று அவர் புக்கிட் அமான் போலீசாரால் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker