Latestமலேசியா

ஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – மலேசிய இந்துக்கள் மற்றும் மலேசிய சீனர்கள் பற்றி பேசியது தொடர்பில் நேற்று ஏறக்குறைய 3 1 /2 மணி நேரம் விசாரிக்கப்பட்ட ஸாக்கிர் நாய்க் வரும் திங்கட்கிழமை தொடர்ந்து விசாரிக்கப்படுவார் என போலீஸ் தெரிவித்துள்ளது.

நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை, ஸாக்கிர் நாய்க்  தம் நோன்பை துறக்க அவகாசம் கேட்ட காரணத்தினால் இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

இதற்கிடையே  ஆயுதப்படையை இழிவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பில் தொழிலதிபர் கூ யூவ் யீன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. ஆயுதப்படையை சேர்ந்த பலர் “சாப்பிட்டு தூங்குவதை தவிர வேறொன்றும் செய்வதில்லை என அவர் கூறியிருந்தார். பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் DONG ZONG – சீன கல்வி இயக்கமும் ஜாவி எழுத்தோவியம் தாய்மொழி பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இஸ்லாமியத்தை பரப்பும் ஒரு நடவடிக்கை எனக் கூறியது தொடர்பில் விசாரிக்கப்படுகிறது.  அதன் தலைவர்  தான் தாய்  கிம்  விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும் ஹூசிர் தெரிவித்துள்ளார்.

ஸாக்கிர் நாய்க் மற்றும் DONG ZONG ஆகியோர் பொது அமைதியை சீர்குலைத்தல் தொடர்பில் குற்றவியல் சட்டம் 504 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker