Latestமலேசியா

ஸாக்கிரிடம் 7 மணி நேரம் விசாரணை

கோலாலம்பூர், ஆக. 17 – சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக் புக்கிட் அமானில் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

நேற்று அவர் பிற்பகல் 3 மணிக்கு புக்கிட் அமான் வந்து இரவு 8.15க்கு வெளியேறினார். ஸாக்கிர் கோத்தா பாருவில் சமய உரையின்போது இந்தியர்கள் சீனர்களைப் பற்றியும் பேசியது பற்றி அவரிடம் புக்கிட் அமான் சிஐடி பிரிவு விசாரித்ததாகத் தெரிகிறது.
வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் எதுவும் பேசாமல் சென்றார்.

திட்டமிட்டு அவமதித்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் போன்ற 115 புகார்கள் அவர்மீது சுமத்தப்பட்டதை அடுத்து குற்றவியல் சட்டம் பிரிவு 504இன் கீழ் அவர் விசாரிக்கப்பட்டார்.

சமய உரையில், இந்தியர்களின் விசுவாசம் பற்றியும் சீனர்கள் விருந்தினர்களாக வந்திருப்பதால், அவர்களே நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் பேசி பல தரப்பாரின் கடும் கண்டனத்துக்கும் ஆளானார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker