Latest

ஆனந்தபவன் உரிமையாரின் மனைவி இறுதிச் சடங்கில் – 1,000க்கும் அதிகமானோர்

பட்டர்வொர்த், ஆக. 18 – ஶ்ரீஆனந்த பவன் உணவகத் தோற்றுநர் வி.பாலகிருஷ்ணனின் துணைவியார் கே.புவணேஸ்வரியின் ஈமச் சடங்கில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஹரிகிருஷ்ணன் ஆனந்த பவன் உணவகத்தின் தொடர் கிளைகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரப்பரியை முறையில் இறுதிக் காரியங்கள் நடத்தப்பட்டபோது, பலர் கண்ணீர் விட்டு அழுததைப் பார்க்க முடிந்தது. இறுதிக் காரியங்கள் ஜாலான் சிராம் இந்து மயானத்தில் நடத்தப்பட்டன.

புவணேஸ்வரி( வயது 47) கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி, வியாழக்கிழமை, வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் பயணித்த போது, வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

தமது தாயாரின் இழைப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்பத்துக் காகவும் ஆனந்தபவனுக்காகவும் அவர் நிறையவே பாடுபட்டிருப்பதாக அவரின் மூத்த மகன் வீராசாமி (வயது 21) கண்ணீரோடு நினைவுகூர்ந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker