Latestமலேசியா

செல்ஃபி மோகம் – ஏமானிய இளைஞன் கடலில் பலி

லங்காவி, ஆக. 18 – லங்காவி, செனாங் கடலில் செல்ஃபி படம் எடுக்க முனைந்த ஏமானிய ஆடவன், கடலில் விழுந்து மரணமடைந்தான்.

நேற்று, காலை 11.15 மணியளவில் அல்-ஷாபிபி இப்ராஹிம் மவுநீர் என்ற 17 வயது ஆடவன் கடலில் பயன்படுத்தும் ஜெட்ஸ்கீ மோட்டாரில் பயணம் செய்யும்போது, செல்ஃபீ எடுக்க முனைந்த போது, வழுக்கி விழுந்து கடலில் விழுந்து காணாமல் போனான்.

மற்ற ஜெட்ஸ்கீயில் இருந்தவர்கள், அவனைக் காப்பாற்ற முனைந்து தோல்வியடைந்ததாக லங்காவி சிவில் பாதுகாப்பு பேரிடர் நடவடிக்கை அதிகாரி அஸாம்ஷா அப்பெரால் தெரிவித்தார்.

ஆடவனுக்கு செனாங் கடற்கரையில் முதலுதவி கொடுக்கப்பட்டது ஆனால்,
சுல்தானா மலிஹா மருத்துவமனையில் அவன் இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker