Latest

வழக்கறிஞர் ஷாரெட்ஸானுக்கு கொலை மிரட்டல் – ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஆக. 18 – வழக்கறிஞர் ஷாரெட்ஸான் ஜோகானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

கிடங்கு ஊழியராகவும் பாதுகாவலராகவும் வேலை செய்யும் அந்த நபர், பண்டார் ஶ்ரீடமான்சாராவில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் சட்டம், பிரிவு 506இன் கீழ் நடத்தப்படும் விசாரணைக்கு அந்த ஆடவர் வியாழக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவார்.

ஸாக்கிர் நாயக்கின் நிரந்தர குடியிருப்புச் சலுகையை ரத்து செய்ய வேண்டுமென ஷாரெட்ஸான் குறிப்பிட்டதை அடுத்து, ஆகஸ்டு 14ஆம் தேதி, புதன்கிழமை ஸாரெட்ஸானுக்கு அந்த ஆடவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

அந்த மிரட்டல் முகநூலில் வெளியிடப் பட்டாதாக இஸ்கண்டார் புத்ரி நாடாளூமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளரான ஷாரெட்ஸான் குறிப்பிட்டு, ஆகஸ்டு 15இல் போலீசில் புகார் செய்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker