Latestமலேசியா

ஸாக்கிரின் சமய உரை- கெடாவில் தடை

அலோர் ஸ்டார், ஆக. 18 – சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கின் சமய பிரசாரத்திற்கு கெடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸுக்கு அடுத்து கெடா அந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் இஸ்மாயில் சாலே தெரிவித்தார்.

ஸாக்கிரின் உரையினால் பல்வேறு குழப்பங்களும் இன ரீதியான பிரிவனையும் எழுந்துள்ளதால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கெடாவுக்குச் செல்ல அவருக்கு அனுமதி உண்டு ஆனால் மதப் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ஸாக்கிர் வட மலேசிய பல்கலைகழகத்தில் சமய உரை நிகழ்த்த மிகுந்த கட்டுப்பாட்டோடு அனுமதிக்கப் பட்டார். ஆனால், இனி கெடாவில் சமய பிரசாரம் செய்ய அவருக்கு அனுமதி கிடையாது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே சரவாக்கிற்கு அவர் செல்ல தடை விதிக்கப்பட்ட வேளையில், சபாவில் தடை விதிக்க அம்மாநிலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker