Latestமலேசியா

ஆட்டு கொட்டகையில் போதைப்பொருள் : ஆடவர் கைது 

மாராங், ஆக 19 – ஆட்டு கொட்டகையில் ரிம 600,000 மதிப்பிலான    போதைப்பொருளைப்   பதுக்கி வைத்திருந்த ஆடவரை கைது செய்து போலீசார் எதிர்வரும் புதன்கிழமை வரையில் தடுத்து வைத்துள்ளனர்.

மாராங் மாவட்ட போலீஸ் அதிகாரி சுப்பரின்டென்டன் மொஹட் சுஹைமி அலி குறிப்பிடுகையில்,  மாவட்ட காவல்துறை தலைமையகம் (ஐபிடி) போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் நடத்திய அதிரடி சோதனையில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தின் போது அந்த ஆடவரின் ஆட்டு கொட்டகையில் 2  கருப்பு பைகளையும் ஒரு பெட்டியையும் கண்டெடுத்தாக தெரிவித்தார்.

மேலும் அச்சோதனையில் ,  யாபா, ஷாபு , எறிமின் போன்ற போதை பொருள்களும் ஒரு கைபேசியையும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவை அனைத்தும் மாராங் வட்டாரத்தில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆடவர் போதை பொருள் சட்டத்தின் பிரிவு 39 B கீழ் விசாரிக்கப்படுகிறார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker