Latestமலேசியா

இன, சமய சகிப்புத் தன்மை: வேண்டும் – அன்வார்

ஷா ஆலம், ஆக. 19 – இன, சமய தீவிரவாதம் பல்லின மக்களும் பல சமயங்களும் வாழும் நாட்டில் அனுமதிக்கப்பட மாட்டாது என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இஸ்லாம் சகிப்புத் தன்மையையும் நேர்மையையுமே போதிப்பதாகவும் அது எக்காலத்திலும் அராஜகத்தையும் இன உணர்வையும் துண்டியது இல்லை என அவர் குறிப்பிட்டார்.

மக்களின் உன உணர்வு தூண்டப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். எனவே, நம்முடைய கருத்தை வெளியிடுவதற்கு முன்னர், தீர ஆலோசித்து, மற்றவர்களைப் புண்படுத்தாத வகையில் எதனையும் பேச வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.

ஸாக்கிர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால், சில தரபார் அதனை எதிர்ப்பர் என சொல்லப் பட்டதற்கு, நாம் நேர்மையாக சிந்திக்க வேண்டும். இன, சமய உணர்வுகளோடு செயல்படக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.

ஸாக்கிரை சந்தித்து அவரின் காரணங்களை விசாரிக்கத் தேவை எழவில்லை. புதன்கிழமை கூடும் கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு பற்றிப் பேசப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker