Latestமலேசியா

கையூட்டு வழக்கு – இதுவரை கைதானவர்கள் பெரும்பாலானோர் அரசாங்க ஊழியர்கள் – லத்திபா கோயா

ஷா ஆலாம் , ஆகஸ்ட் 19 – கையூட்டு வழக்கில் கைதானவர்களில் பாதிக்கு பாதி பேர் அரசாங்க ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் என MACCயின் தலைவர் லத்திபா கோயா அறிவித்துள்ளார்.

குறிப்பாக, 2014ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் கையூட்டு தொடர்பாக கைதான 4869 பேரில் 46.3 விழுக்காட்டினர் அரசாங்க ஊழியர்கள். அதிலும் அதிகமான கையூட்டு கொள்முதல் துறையில் நடந்துள்ளது என்பது வருத்தமளிக்கிறது என்று இன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஊழல் இல்லா உறுதிமொழி நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் இத்தகவலை குறிப்பிட்டார்.

கைதானவர்களில் 53.4 விழுக்காட்டினர் 40 வயது மற்றும் அதற்கு கீழ்பட்டவர்கள் என்றும் லத்திபா அறிவித்தார்.

அரசாங்க ஊழியர்களிடம் MACC மேற்கொண்ட ஒரு ஆய்வில், 21.1 விழுக்காட்டினர் தங்களுக்கு பதவி இருந்தால் கையூட்டுப் பெற தயங்க மாட்டோம் என தெரியவந்துள்ளது. நாட்டில் ஊழல் பழக்கம் கைமீறி போவதற்குள் இந்த மனப்பான்மை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker