Latestமலேசியா

சிகரெட்டினால் அடுக்குமாடி வீடு- அலங்கோலமானது

ஜோர்ஜ் டவுன், ஆக. 19 – காலையில் எழுந்தவுடன் முதியவரின் சிகரெட் புகைக்கும் பழக்கம், குடியிருக்கும் வீட்டுக்கு கடும்ச் சேதத்தை உண்டாக்கியுள்ளது.

பாயா தெருபோங்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில், சிகரெட்டின் நெருப்பானது எரிவாயுக் கலனில் கசிந்த வாயுவின் மேல் பட்டு வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயுக் கலன் வெடிப்பில் 62 வயது முதியவர் 80 விழுக்காட்டு காயத்துக்கு ஆளானார். வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இச்சம்பவம் நேற்று காலை 8.15 மணிக்கு நடந்துள்ளது. அந்த முதியவர் கவலைக்கிடமான நிலையில் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அந்த வெடிப்பினால் 20ஆவது மாடியில் இருந்த வீடு கடுமையாகச் சேதமடைந்தது. பக்கத்து வீட்டுக்கு இடையிலான சுவர் இடிந்து விழுந்தது.

வீட்டின் இன்னொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகன், மருமகள், பேரன் உயிருடன் தப்பினர்.

விசாரணையில் எரிவாயுக் கலனில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் எனும் கருவி கழன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker