Latestமலேசியா

நோராவின் மீது மறு பிரேத பரிசோதன – குடும்பத்தினரின் முடிவாகும்

ஈப்போ, ஆக. 19 – நாட்டின்உடற்கூறு நிபுணர்களின் மீதான தொழில் சார்ந்த நம்பிக்கை அதிகமாகவே இருப்பதாக டாக்டர் லீ பூன் சை தெரிவித்தார்.

எனவே, மரணமடைந்த நோரா ஆன் குவோரின்(வயது 15) என்பவரின் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை செய்வதான முடிவை அவரின் பெற்றோரே எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சரான டாக்டர் லீ தெரிவித்தார்.

அது அவர்களின் உரிமையாகும். எனினும், நம்முடைய நிபுணர்களின் தகுதியின் மீது நாம் முழு நம்பிக்கையை வைத்திருக்கிறோம்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்று, நோராவின் பெற்றோர் இரண்டாவது பிரேத பரிசோதனையைக் கோருவார்கள் என்றும் அதனை பிரிட்டன் அல்லது பிரான்சில் செய்ய வேண்டுமென விரும்புவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்டு 4ஆம் தேதி நீலாய் தங்குமிடத்தில் காணாமல் போன நோரா, 10 நாள்களுக்குப் பின்னர் 2.5 கிலோ மீட்டரின் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

அவரின் பிரேத பரிசோதனையில் நோரா பல நாள்கள் உணவை உட்கொள்ளாததால் குடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker