Latestமலேசியா

மலிண்டோ ஏர் விமானத்தில் குடிபோதையில் ஆடவர் ரகளை !

பெட்டாலிங் ஜெயா, ஆக 19 – நேற்றிரவு லங்காவியிலிருந்து சுபாங் நோக்கி பயணித்த மலிண்டோ ஏர் விமானத்தில் குடிபோதையில் 23 வயது ஆடவன் ஒருவன் விமானத்தில்   ஒழுங்கீன செயல்  புரிந்ததன் குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட ஒசிபிடி துணை ஆணையர்  சானி செ டின் குறிப்பிடுகையில்,    சம்பவத்தின் போது அந்த இளைஞர் குடிநீர் போத்தலில் மஞ்சள் நிறம் போன்ற நீரை பருகியதாகவும், அவரை நெருங்குகையில் மது வாடை வீசியதாகவும் தெரிவித்தார்.

அங்கிருந்த விமான பணிப்பெண்ணொருவர் பலமுறை அவனை கண்டித்துள்ளார். சுபாங்கில் விமானம் தரையிறங்குகையில்  அவனின் ரகளை எல்லைமீறி  தகாத வார்த்தைகளையும்  பயன்படுத்தியுள்ளதாக சானி மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த இளைஞர் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker