Latestமலேசியா

ஸாக்கிர் வரம்பை மீறி விட்டார் – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஆக. 19 – சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக், வரம்பை மீறி இன, அரசியலைத் தொட்டு நாட்டின் இனங்களுக்கிடையிலான உணர்வைத் தூண்டியிருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

அவருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை யார் தந்தது என்பது தெரிவில்ல்லை என குறிப்பிட்ட அவர், அவர் மதம் பற்றிய பிரசாரம் செய்யாமல் சீனர்கள் சீனாவுக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்குப் போக வேண்டுமென்றும் கூறுவது அரசியலாகும் என உலக புள்ளிவிவர காங்கிரசின் 62 ஆவது மாநாட்டை திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மதத்தைப் பற்றி பேச ஸாக்கிருக்கு அனுமதி உண்டு. ஆனால், அதை விடுத்து அவர் இன ரீதியான அரசியலில் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. அவர் இன உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்து வருகிறார்.

இன அரசியலைப் பேசி இன பதற்றத்தை ஏற்படுத்தினால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். அரசின் நடவடிக்கை யாவும் சட்டமுறைப்படிதான் மேற்கொள்ளப்படும் என மகாதீர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker