Latestமலேசியா

மலாய்க்காரர் அல்லாதோரை கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதா? சமூகவாதி காட்டம்

மலாக்கா, ஆக. 19 – அபாயகரமான கத்திகளைக் காட்டி மலாய்க்காரர்கள் அல்லாதோரை அச்சுறுத்தும் வீடியோ பதிவை சமூகவாதி ஒருவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மலாக்கா பயனீட்டாளர், சுற்றுச்சூழல் கழகத்தின் மகளிர் பிரிவுத் தலைவி அஸிஸா ஹருண், அது பற்றி தம்மை ஜோகூர்காரர் என கூறும் அந்த நபர் மீது மலேசியர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அவர் சார்ந்த சமயத்துக்கு அவப்பெயரை அந்த நபர் சம்பாதித்துக் கொடுத்துள்ளார். நாம் அமைதியானவர்கள். வன்முறையில் செல்லாதவர்கள். நாம் புதிய சகாப்தத்தில் வாழ்கிறோம், 1969ஆம் ஆண்டில் அல்ல. நம்முடைய இயலாமைக்கு மற்ற இனத்தவரைக் குறை சொல்லக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

மற்ற இனத்தவர்களும் அம்மாதிரி கத்திகளைக் காட்டி அச்சுறுத்தினால், நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் என அஸிஸா எச்சரித்தார்.

மற்ற இனத்தவர்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். அண்மைய இன, அரசியல் பதற்றத்தின் காரணமாக தேசிய தினத்தைக் கொண்டாட மக்கள் ஈடுபாடு காட்டவில்லை.

வெளியிடப்பட்ட வீடியோ பதிவு இஸ்லாத்தின் போதனையைப் பிரதிபலிக்க வில்லை. சரியானபடி சிந்திக்கும் மலேசியர்கள் அந்த அநாகரிக நடவடிக்கையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என அஸிஸா கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker