Latestமலேசியா

அனைத்து மாநிலங்களிலும் – ஸாக்கிரின் சமய உரைக்குத் தடை

கோலாலம்பூர், ஆக. 20 – சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சமய உரை நிகழ்த்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

அது தேசிய நலனை முன்னிட்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.

அந்தத் தடை உத்தரவுக்கான அறிவிப்பு எல்லா மாநில போலீஸ் தலைமையகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதைப் போலீஸ் தலைமையக நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் அஸ்மாவாத்தி அகமட் உறுதிப் படுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், சிலாங்கூர், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சரவாக் மாநிலங்களோடு மலாக்காவும் ஸாக்கிருக்கு சமய உரை நிகழ்த்தத் தடை விதித்தன.

ஞாயிற்றுக்கிழமை ஸாக்கிர் பற்றிக் குறிப்பிட்ட துன் மகாதீர், அவர் வரம்பை மீறி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் மீது போலீசார் விசாரணை நடத்தும்படி பணிக்கப்பட்டது.

அவருக்கு எதிராக 115 புகார்களைப் பெற்ற பின்னர், ஸாக்கிர் குற்றவியல் சட்டம், பிரிவு 115இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker