Latestசினிமா

அபிராமி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்தோசம்:- முகேன்

சென்னை,ஆக.20- பிக்பாஸில் நடிகை அபிராமி முகேனை காதலிப்பதாக ஓப்பனாகவே கூறினார். ஆனால் அவர் தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாக கூறி அதை நிராகரித்தார்.

இந்நிலையில் இன்று அபிராமி பிக்பாஸ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்டவர்கள் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

மற்ற போட்டியாளர்கள் போலவே அபிராமி வெளியில் போகும் முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட மெடலை சுத்தி வைத்து உடைத்துவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினார்.

முகேன் அபிராமி உடைத்த அந்த மெடலின் துகள்களை சேகரித்து மீண்டும் ஒட்ட துவங்கினார். அபிராமியை காதலிக்கவில்லை என கூறிவிட்டு தற்போது இப்படி முகேன் செய்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷன் முகேனை பார்த்து கலாய்த்தார். ஆனாலும் அந்த மெடலைப் பார்த்து கஷ்டப்பட்டார். அதே வேளை அபிராமி இருந்தாலும் சந்தோஷம் இல்லாவிட்டாலும் சந்தோஷம் என்றார். இருப்பினும் உடைத்ததை பொறுக்கி ஒட்டியதை பார்த்தால்  காதல் இருக்கும் ஆனால் இல்லை  என எண்ணத் தோன்றுகிறது!.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker