Latestமலேசியா

உத்துசான் மலாயு- பிரசுரம் நிறுத்தம்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 20 – நாட்டில் மலாய் மொழியின் மூத்த பத்திரிகையாகத் திகழ்ந்த உத்துசான் மலாயு புதன்கிழமையன்று பிரசுரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.

உத்துசான் குழுமத்தின் உத்துசான் மலேசியா, மிங்குவான் மலேய்சியா, கோஸ்மோ ஆகியவை அச்சு பிரசுரத்தையும் ஆன்லைன் வெளியீட்டையும் நிறுத்திக் கொள்ளும் என தெரிகிறது.

உத்துசான் நிறுவனம் நிதியில்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக அதன் செயல்முறை தலைவர் அப்துல் அஸிஸ் ஷேய்க் பாட்சிர் தெரிவித்துள்ளார்.

ஊழயர்களின் சம்பளத்தைச் செலுத்த முடியாமல் நிர்வாகத்தை இனி மேலும் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையை மூட அதன் வாரியம் முடிவு செய்ததாகவும் பங்குச் சந்தையில் அது பற்றி அறிவிக்கப்படும்.

ஜூன் மாதத்திலிருந்து உத்துசான் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தைச் செலுத்துவதில் சிக்கலை எதிர்நோக்கி வந்துள்ளது. ஜூன் மாதத்தில்அதன் நிர்வாக ஊழியர்களுக்கு வெறும் 2,000 ரிங்கிட்டை மட்டுமே வழங்கியது.

அது வழங்கிய சுய வேலை இழப்பில் 1,400லிருந்து அதன் ஊழியர் எண்ணிக்கை 823 ஆகக் குறைக்கப்பட்டது.

உத்துசான் மலேசியா முதன்முதலில் உத்துசான் மலாய் என்ற பெயரில் சிங்கப்பூரில் 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 1இல் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker