Latestசினிமா

என் தைரியத்தை சோதித்தார்கள் பொறுக்க முடியவில்லை:- மதுமிதா

சென்னை,ஆக.20- தான் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று முதன்முறையாக மதுமிதா மனம் திறந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முதல் சீசனில் ஓவியா பல விஷயங்கள் செய்து வெளியேறினார்.கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றதாலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மதுமிதா இப்படி கையை அறுத்துக் கொண்டதற்கு காரணம், கவின், மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஷெரீனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “தமிழச்சி என்று சொல்லிக் கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரைக் கொடு” என்று கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளாலும் மதுமிதாவைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.இதனால், மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கவின், எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.இதனிடையே பிக்பாஸ் மது மிதா இப்படி கூறுகிறார்

முதன்முறையாக ஏன் அப்படி செய்தேன் என பேட்டி கொடுத்துள்ளார் மதுமிதா. அதில், நான் தைரியமான பெண், என் தைரியம் எந்த அளவிற்கு என் தைரியத்தையும் பொறுமையையும் அவர்கள் சோதித்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பேன் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

நான் என் கருத்தை அங்கு வெளிப்படுத்தினேன், என்னை எவ்வளவு இழிவாக, கீழ்ததரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள் என்றார்கள். கடைசியில் யார் முட்டாள் என்று தெரியப்படுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker