Latestஉலகம்

ஒட்டுமொத்த குடும்பம் வெட்டி கொலை:- சிறுவனும் தற்கொலை! 

மாஸ்கோ,ஆக.20- 16 வயது பள்ளிச் சிறுவன் தன்னுடைய தாய், இரட்டை சகோதரர்கள் மற்றும் தாத்தா பாட்டி என ஐந்து பேரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த திமூர் கிமனெட்டினோவ் என்கிற 16 வயது சிறுவன் கல்வியில் சிறந்தவனாக பிராந்தியத்தில் நடைபெற்ற பல அறிவார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளான். திமூரைப் பற்றி சுற்றி உள்ள வீடுகளை சேர்ந்த பலரும் பெருமையாக பேசி அவனுடைய அம்மாவிடம் கூறுவர்.

அந்த அளவிற்கு நல்ல பெயருடன் விளங்கிய சிறுவன் நேற்றைய தினம் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளான்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டு இருந்துள்ளான் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முன்னர் சிறுவன் எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் நெருங்கிய உறவினர் இறந்ததை நினைத்து தாத்தா விக்டர் வயது 69 மற்றும் பாட்டி வயது66 அழுது கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். சிறுவனுடைய நண்பன் ஒருவரிடம் விசாரித்தபோது இரட்டை குழந்தைகள் பிறந்த பின்னர் தாய் சரியாக தன்னை கவனிப்பதில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார் என்று கூறியதாக தெரியவந்துள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker