Videosமலேசியா

கோட்டுமலை ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 –  நேற்று மஹா சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு கோலாலம்பூர் கோட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் சுமார் 1,500 பக்தர்கள் திரண்டனர். மாலை மூன்று மணிக்கு சிறப்பு ஹோமத்துடன் தொடங்கிய உற்சவம் இரவு 10.30 மணி அளவில் நிறைவுபெற்றது.

இந்தப் பிரார்தனையில்இடம்பெற்ற 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். ஸ்ரீ கணேசருக்கு பால், தயிர், தேன், சந்தனம், குங்குமம், பண்ணீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்திற்குப் பிறகு, பக்தர்களால் கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான வண்ண  மாலைகளால் ஸ்ரீ அலங்கரிக்கப்பட்ட கணேசருக்கு சோட சோப உபசாரங்களுக்குப் பின் தீபாராதனையும் 1008 அர்ச்சனையும் இனிதே நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பூஜையில் பங்கெடுத்த பக்தர்களுக்கு காளாஞ்சிப் பிரசாதம் வழங்கப்பட்டு , இரவு உணவும் மற்றும் பல்வேறு இனிப்பு பலகாரங்களும் வழங்கப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker