Latestமலேசியா

மலேசியாவில் சடாம் ஹுசேய்ன் போல தலைவர் வேண்டும் – அஸ்ரி

பெட்டாலிங் ஜெயா, ஆக. 20 – நாட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மை யினரின் உரிமையின் மீது கேள்வி எழுப்புவதைத் தடுக்க நாட்டிற்கு சடாம் ஹுசேய்ன் போன்ற கொடுமையான தலைவர்கள் வேண்டுமென பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஸைனுல் அபிடின் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்களின் உரிமை மற்றும் அரசியலில் மலாய்க்காரர்களின் மேலாதிக்க்கத்தைத் தற்காத்துப் பேசியிருக்கும் அவர், நாட்டில் கட்டொழுங்கு சரிந்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை இன மக்கள் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தின் மீது கேள்வி எழுப்புவது தேசிய பாரம்பரியத்தை உதாசீனம் செய்யும் செயலாகும்.

சடாம் சஹுசெய்ன் போன்ற கொடுமையான தலைவர்களை நாம் விரும்பாவிட்டாலும், அவர் இருக்கும்போது ஈராக் பல மாநிலங்களாகப் பிரிந்து கிடக்கவில்லை என அஸ்ரி சுட்டிக் காட்டினார்.

நாட்டில் இருக்கும் இன ரீதியான ஆரசியல் குண்டர் கும்பல்களை ஒடுக்க சடாம் ஹூசேய்ன் போன்ற பலமான, கொடுமையான தலைவர்கள் அவசியம்.

பல குண்டர் தலைவர்களை ஒடுக்க, நாட்டின் தலைவர் குண்டர் உறுப்பினர் போலவே செயல்பட வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் இஸ்லாமிய பல்கலைக்கழகக் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அஸ்ரி அவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், மலேசியா மலாய்க்காரர்களுக்கே எனும் தமது நிலைப்பட்டை அவர் தற்காத்துப் பேசினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker