Latestஇந்தியா

ரஜினிகாந்த் தன் கறுப்பு பணத்தை காப்பாற்றவே காஷ்மீர் பிரச்சனையை ஆதரிக்கிறார்!

சென்னை,ஆக.20- ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதற்கு இன்றளவும் கருப்பு பணம் வாங்குகிறார் அதை பதுக்குவதற்காகவே காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை ஆதரிக்கிறார் என பிரபல அரசியல் பிரமுகர் வேல்முருகன் வெகுண்டெழுந்திருக்கிறார். மோடியின் பாஜக அரசை அரசாக சப்போர்ட் பண்ணி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபகாலமாக வெளிப்படையாக பாஜக அரசை ஆதரிப்பது அதற்கு எதிராக பேசுபவர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.

ரஜினியின் இந்த போக்கை கண்டித்து நாம் தமிழர் சீமான் திருமாவளவன் ஆகியோர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமாக பதிலை தெரிவித்துள்ளார்.

தான் நடிக்கும் படங்களில் வாங்கும் கருப்பு பணத்தை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார் என அதிரடியாக தெரிவித்துள்ளார் வேல்முருகன்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker