Latestமலேசியா

வங்கி ஆவணங்களின் கையெழுத்துகள்: தனது என நஜிப் ஒப்புக் கொண்டார்

கோலாலம்பூர், ஆக. 20 – ஊழல் தடுப்பு அதிகாரிகள் நஜிப் ரசாக்கிடம் 3 முறை விசாரித்த பொது, வங்கி ஆவணங்களில் காணப்பட்ட தமது கையெழுத்தின் மீது எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நஜிப் சம்பந்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் முறைகேட்டு வழக்கில் சாட்சியமளித்த கடைசி சாட்சியான ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரியான ரோஸ்லி தமது சாட்சியத்தில், தாம் 2015 டிசம்பர் 5, 2018 மே 22 மற்றும் 2018 மே 24ஆம் தேதிகளில் நஜிப்பை விசாரித்ததாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 42ஆவது சாட்சியான எஸ் ஆர்சியின் முன்னாள் இயக்குநர் சூபோ மாட் யாசின், பல நிறுவன ஆவணங்களில் காணப்பட்ட நஜிப்பின் கையெழுத்துகளில் சந்தேகங்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

ராஜா சூலான் ஆம்பேங்கின் அதிகாரி ஆர்.உமாதேவி, 2011லிருந்து 2015 வரை நஜிப் தமது கையெழுத்தின் மீது எந்தவொரு புகாரையும் தெரிவிக்க வில்லை என்றும் அவர் தமது மூன்று வங்கிக் கணக்குகளில் மில்லியன் கணக்கான பணம் செலுத்தப்பட்டும், வெளியாக்கப்பட்டும் இருந்த வேளையில், அது பற்றி நஜிப் புகார் எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேட்டு வழக்கில் நஜிப் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker