Latestமலேசியா

விபத்தான எண்ணெய் லாரி வெடித்தது:  19 பேர் பலி !

கம்பாலா, ஆக. 20 – எண்ணெய் லாரி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வெடித்ததில்  19 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் மேற்கு உகாண்டாவில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இவ்விபத்தின்போது சம்பந்தபட்ட எண்ணெய் லாரி கட்டுப்பாட்டை இழந்து 3 மூன்று வாகனங்களை  மோதி விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.

அதில் 10 பேர் சம்பவ இடத்திலும் இன்னும் 9 பேர் மருத்துவனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில்,  சம்பவ இடத்தில் இருந்த  25 கடைகள்  முற்றாக சேதமடைந்தன.
சமீபத்தில் தன்சானியாவிலும்  இதே போன்ற அசம்பாவிதம்  நிகழ்ந்தபோது,  94 பேர் கொல்லப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker