Latestஉலகம்

4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது!

பெர்லின்,ஆக.20- சுவிஸர்லாந்து ரயில் நிலையம் ஒன்றில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நான்கு வயது மகளை தரையில் மோதி அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈராக்கை சேர்ந்த அந்த நபர் புராக் ரயில் நிலையத்தில் பலமுறை அந்த குழந்தையை தரையில் மோதி இடித்ததில் அவளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அடிபட்ட அந்த சிறுமி இரத்த வாந்தி எடுத்ததோடு சுய நினைவிழந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் அந்த சிறுமியை சேர்த்தனர் போலீசார்.

பின்னர் அந்த குழந்தையின் தந்தையை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விசாரணைக்கு முன்பாகவே சிறையில் அடைக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கூறியதனையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டார். அவர் தனது மகளை 10 நாட்களுக்கு சந்திக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த சம்பவம்  நிகழ்ந்த நிலையில் தற்போது அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker