Latestமலேசியா

இன, சமய உணர்வுகளைத் தூண்டுவோர் உடனடி கைது – ஹமிட் படோர்

கோலாலம்பூர், ஆக. 21 – இனம், சமயம் போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களை எழுப்புவோர் எந்தவொரு அறிவிப்பும் இன்றி கைது செய்யப்படுவர் என போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

அதில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் காட்டப்படாது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் அதில் கவரப்பட்டு, பொய்யான செய்திகளையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு நாட்டின் அமைதியைக் கெடுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

பொதுமக்கள் உணர்ச்சிக்கு இடம் கொடுத்து தேவையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. சிந்தனையற்ற செயல்பாடுகளினால் சந்தேகம், அச்சம் மற்றும் கலவரம் போன்றவை ஏற்படக் காரணமாகிவிடும் என அவர் எச்சரித்தார்.

அரசியல் தலைவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் அமைதிக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென ஹமிட் படோர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker