Latestமலேசியா

எரிவாயு கலன் வெடிப்பு: முதியவர் மரணம்! 

ஜோர்ஜ் டவுன், ஆக. 21 –  எரிவாயுக் கலன் வெடிப்பில் பலத்த தீக்காயமுற்று பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  முதியவர் லீ  கோக் எங்( வயது 62)  இன்று விடியற்காலை 2 .30  மணியளவில்   மரணமடைந்தார்.அவரது இறப்பை அவரின் மகன் லீ  கியே  சூன் ( வயது 38 ) உறுதிப்படுத்தினார்.

கடந்த 19 திகதியன்று  பாயா தெருபோங்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில், அந்த முதியவர்  பற்ற வைத்த   சிகரெட்டின் நெருப்பானது,  எரிவாயுக் கலனில் கசிந்த வாயுவின் மேல் பட்டு வெடித்ததில் அந்த அடுக்குமாடி வீட்டிற்குப் பெரும் சேதத்தை உருவாக்கியதோடு அந்த முதியவருக்கும் கடுமையான காயத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker