Latestமலேசியா

கைவிடப்பட்ட கட்டடத்தில் : மனித எலும்புக்கூடு! 

பட்டர்வோர்ட், ஆக. 21 – கைவிடப்பட்ட  கட்டடம் ஒன்றில்  துணியினால் மூடப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் ஜாலான் பாகன் லுவார் எனுமிடத்தில் நடந்துள்ளது.

பொதுமக்களில் ஒருவர் கொடுத்த புகாரில் அங்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் அச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதாகவும், அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் அந்தச் சடலத்தைக் கண்டெடுத்ததாக வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் துணை ஆணையர் நோர் ஸைனி முகமட் நோர் தெரிவித்தார்.

அடையாளம் தெரியாத மனித எழும்புக் கூட்டை பற்றி தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே,  அந்த மனித எழும்புக் கூட்டை பிரதேப் பரிசோதனைக்காக செபெராங் பிறை மருத்துவமனைக்குக் கொண்ட சென்றுள்ளதாகவும் இதுவரை யாரும் காணாமல் போனதாக எவ்வித புகார்களையும் பெறாத நிலையில், தகவல் தெரிந்தோர் போலீசாரை நாடுமாறு
ஸைனி கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker