Latestமலேசியா

சாலை விபத்தில் ஒருவர் மரணம் : மூவர்  காயம் ! 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – சாலை விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்ற மூவர் காயமுற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை செந்தூல் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு முன் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து, செந்தூல் தீயணைப்பு மீட்பு நிலைய  துணை ஆணையர் கொமாண்டர் S திருகாய குறிப்பிடுகையில், விடியற்காலை 3 .44 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும் சம்பவத்தின் போது அந்த Myvi ரக கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அந்த காரினுள் ஆடவர் ஒருவர் நசுங்கி  சிக்கியிருந்தாகவும், பெண் ஒரு கால் உடைபட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்த காரில் பயணித்த நால்வரில் ஒருவர் மாண்டதாகவும் மற்ற மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி கோலாலம்பூர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker