Latestஉலகம்

பாம்பு, தவளையைப் பிடித்துக் கடிக்கும் வினோத சிறுவன்! 

சியஞ்சூர், ஆகஸ்ட் 20  –  11  வயது சிறுவன் ஒருவன் உயிருள்ள பாம்பு, தவளை, வாத்து போன்ற உயிரினங்களைப் பிடித்து, அவற்றை சாகும் வரை கடிக்கும்  வினோத பழக்கத்தைக் கொண்டுள்ளான்.

இந்த விநோதமான பழக்கம்  இந்தோனேசியா சியாஞ்சூர் எனும் பகுதியில் நிகழ்ந்து வருகிறது. ரிஸ்கி மவுலானா யூசுப் எனும் அந்தச் சிறுவனுக்கு 6 வயதில் கடுங்காய்ச்சல் கண்டு வலிப்பு ஏற்பட்டதற்குப் பின்னரே இவ்விநோத பழக்கம் உண்டானதாக அவனது தாயார் ரிஸ்கி சுச்சு (வயது 30) தெரிவித்தார்.

அவனது விநோதமான செய்கையைக்  கண்டித்தால் அவன் கோபப்படுவதாகவும் ரிஸ்கி ஊடகத்திற்குத் தெரிவித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில், பூனை, கோழி போன்ற வளர்ப்புப்  பிராணிகள் அவ்வப்போது மாயமாவதால் ஊர் மக்கள் இச்சிறுவன் மீது சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker