Latestமலேசியா

போலீஸ்காரர்களிடையே போதைபொருள் பழக்கம் – கடுமையான அளவில்

கோலாலம்பூர், ஆக. 21 – நாடு முழுமையும் உள்ள போலீஸ்காரர்களிடம் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில், 100 போலீஸ்காரர்கள் அப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த எண்ணிக்கையை அறிந்து தாம் அதிர்ந்து போயிருப்பதாகப் போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

ஆகஸ்டு 13லிருந்து ஆகஸ்டு 20 வரையில் 3,438 போலீஸ்காரர்களிடம் நடத்தப்பட்ட புளூ டெவில் எனும் சோதனையில், 86 பேர் ஷாபுவையும் 6 பேர் அம்பெத்தாமின் மற்றும் ஒபியேட்டையும், இருவர் கேன்னபிசையும்(கஞ்சா) இன்னும் ஒருவர் கெத்தாமின் போதைப் பொருளையும் பயன்படுத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. இது கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்ட அமலாக்கத்தைக் காக்க பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் போலீஸ்காரர்களே சட்டத்துக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டால், நாட்டின் நிலை என்னாவது?

நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். லத்தீன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது போன்று இங்கேயும் மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பழக்கம் கொண்ட போலீஸ்காரர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் பணம் பறிப்பதோடு லஞ்சம் பெறுவதாகவும் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் சோதனையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போலீஸ்காரர்கள் பொதுமக்களைப் போன்றே விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker