Latestமலேசியா

மகளைக் கண்டுபிடிக்க – இந்திராவின் சாலையோரக் கூட்டங்கள்

கோலாலம்பூர், ஆக. 21 – தமது முன்னாள் கணவரையும் இளைய மகளையும் தேடிக் கண்டு பிடிக்கும் நோக்கில் இந்திரா காந்தி நாடு முழுமையிலும் சாலையோரக் கூட்டங்களை நடத்தவுள்ளார்.

மகளைத் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டுமென கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டு, சிறப்பு செயற்குழு உருவாக்கப்பட்டும் தமது மகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் போலீசார் தோல்வி அடைந்து வருகின்றனர்.

எனவே, தமது மகந்த் தேடும் நோக்கிலும், மக்களிடையே தமது போராட்டங்களை விளக்கவும் இந்திரா காந்தி, பிரிக்பீல்ட்ஸில் தனது முதல் சாலையோரக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டாவதாக குளுவாங்கிலும் நடத்தவுள்ளார். அதன் பின்னர் அந்தக் கூட்டங்கள் பேரா, பினாங்கு, கெடா மற்றும் கிளந்தானிலும் நடத்தப்படும்.

அந்தச் சாலையோரக் கூட்டங்கள் இந்திய சமூக அமைப்புகள், இங்காட் எனும் சமூக அமைப்பின் ஆதரவில் நடத்தப்படுவதாக அதன் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா மதம் மாறிய பின்னர், தமது 3 பிள்ளகளையும் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றி, தமது இளைய மகள் பிரசன்னா டிக்ஷா 11 மாதக் குழந்தையாக இருக்குபோது, கடத்திச் சென்றுள்ளார்.

ரிடுவான் தற்போது தென் தாய்லாந்தில் பதுங்கி வாழ்வதாகவும், பிரிவினை கோரும் தரப்பாரும் பாஸ் கட்சியும் அவருக்கு ஆதரவு கொடுத்து வருவதாகவும் இந்திரா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு மதம் மாற்றப்பட்ட வழக்கிலிருந்து காணாமல் போனோரின் வழக்கு என வகை படுத்தப்பட வேண்டுமென இங்காட் இயக்கத்தின் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker