Latestமலேசியா

முன்னாள் காதலியின் காதலருக்கு கத்திக் குத்து – பொறாமை காரணமா? 

ஜோர்ஜ் டவுன், ஆக.21 – உணவு விற்பனையாளர் ஒருவர், பொறாமையினால் முன்னாள் காதலியின் நண்பரைக் கத்தியால் குத்திக் காயம் ஏற்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று அதிகாலை 1.15 மணியளவில் லோரோங் அபு என்ற பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

54 வயதுடைய நபர் தலைகவசத்துடன் கடையினுள் புகுந்து, 46 வயது நபரின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற அக்கடையின் உரிமையாளரையும் தாக்கிவிட்டு அந்த நபர்,  மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியதாகத் தெரிகிறது.

இச்சம்பவத்தின் விசாரணையில்,  அந்நபர் மற்றும் அவரின் முன்னாள் காதலியும் கடந்த 6 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து, உணவு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், திருமணமான அந்த ஆடவர், கடந்த 1 மாத காலமாகக் காதலியைச் பிரிந்து வாழந்துள்ளார். அதே சமயம் கத்திக் குத்துக்கு ஆளான ஆடவர் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற பொறாமையில் அவரைத் தாக்கியதாக மாவட்ட போலீஸ் அதிகாரி சீ சைமானி சீ அவாங் தெரிவித்தார்.

மேலும், கத்திக் குத்துக்கு இலக்கான நபரும் அவரின் முதலாளியும் ம் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  காலை 6 மணியளவில் குற்றவாளியைப் போலீசார் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker