Latestமலேசியா

ஸாக்கிரின் இன துவேஷம்- வேண்டத்தகாதது- அன்வார்

கோலாலம்பூர், ஆக. 21 – இந்தியர்களையும் சீனர்களையும் இனத் துவேஷமாகப் பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கின் செயலானது, தேன் கூட்டைக் களைத்ததற்குச் சமமாகும் என பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.

நிரந்தர குடியிருப்புக்கான அனுமதியைப் பெற்றதற்கு நன்றி தெரிவிக்காமல் அவர் இனங்களைத் தாக்கிப் பேசியிருப்பது அரசுக்குப் பிரச்சினையையும் நெருக்குதலையும் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவர் சமயத்தைப் பற்றி பேச பல விஷயங்கள் இருக்கும்போது, இன துவேஷடத்தைக் கிளப்பியிருப்பது வேண்டத்தகாதது. அதனை தாம் ஏற்றுக்கொள்ளாமல் வெறுப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

நேற்று, போர்ட்டிக்‌ஷனில் பேசிய அன்வார், பிரச்சினைகளுக்கிடையேயும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கி வரும் அரசுக்கு அவர் நன்றிகடன் பட்டிருக்கிறார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 504இன்கீழ் அவமானப்படுத்துதல், அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் சம்பந்தமாக ஸாக்கிரின் மீது 115 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அவர் புக்கிட் அமான் புலனாய்வுப் பிரிவினரால் இரு முறை விசாரிக்கப் பட்டுள்ளார். முதலில் 5 மணி நேரமும் இரண்டாவது முறையில் 10 மணி நேரமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அவர், கோத்தாபாருவில் இந்தியர்களின் விசுவாசம் பற்றியும் விருந்தினர்களாக வந்திருக்கும் சீனர்கள் நாட்டை விட்டு செல்லவேண்டுமெனவும் குறிப்பிட்டு இன ரீதியான சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

அது தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களில் அவரின் சமய உரைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி, தீவிரவாதத்தைத் தூண்டி விட்டது போன்ற குற்றங்களுக்காக இந்திய அரசினால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker