Latestமலேசியா

இப்போதைக்கு ஸாக்கிர் நாய்க் நாடு கடத்தப்படமாட்டார் – துன் மகாதீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 22 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க்கை நாடு கடத்த வேண்டும் என நாட்டில் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், ஸாக்கிர் இப்போதைக்கு இந்தியாவிற்கு திரும்பி அனுப்பப்பட மாட்டார் என பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.

இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்பியதோடு சீனர்கள் விருந்தாளிகள் என அண்மையில் கிளந்தானில் ஸாக்கிர் வழங்கிய சொற்பொழிவில் பேசிய கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்கள் வெளிவந்தன.

போலிஸ் விசாரணை தெரியும் வரை , ஸாக்கிர் நாடு கடத்தப்படுவது குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மாறாது” என இன்று புத்ராஜெயாவில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் குறிப்பிட்டார்.

பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸாக்கிர் இந்தியா திரும்பினால் அவருக்கு நியாயம் கிடைக்காது என மகாதீர் கூறி வந்தார்.

ஸாக்கிர் மீது வலுத்த கண்டனங்களை அடுத்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இவ்வாரம் திங்கட்கிழமையும் ஸாக்கிர் புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவர் பொது மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தான் பேசும் கருத்துகள் பொதுவாகவே தவறாக புரிந்துக் கொள்ளப்படுகின்றன எனவும் ஸாக்கிர் கூறியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker