Latestஉலகம்

காதலனுக்காக கர்ப நாடகமாடி பேரப்பிள்ளையை கடத்திய பாட்டி

சீனா,ஆக.22 – தன்னுடைய காதலுனுக்காக கர்பமாக இருப்பது போல் நாடகமாடி, சொந்த பேரப்பிள்ளையை கடத்திய 55 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருமணமான சேங் என்ற அம்மாது தற்போது அவரின் காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ‘நமக்கு குழந்தை இருந்தால் மட்டுமே நான் உன்னுடன் இறுதி வரை இருப்பேன் என்று அந்த காதலன் கூறியுள்ளான். ஒரு சமயம் அம்மாது கர்பம் தரித்த போது வயதாகி விட்டதால் குழந்தை களைந்து விட்டது. இதனை காதலனுக்கு தெரிவிக்காமல் தொடந்து கர்பமாக இருப்பது போல் நாடகமாடியுள்ளார்.

இவ்வாறாக நடந்து கொண்டிருக்க, அவரின் குழந்தை பிறக்கும் தேதியும் நெருங்கியது. ஒருநாள், அவரின் பேரப்பிள்ளையின் கலாச்சார விருந்தில் அனைவரும் இருக்க சேங்கையும் பேரப்பிள்ளையையும் காணவில்லை என அவரின் முன்னாள் கணவர் தெரிவித்தார். இதனால் அவர் குழந்தையை கடத்தி விட்டார் என சந்தேகம்  எழுந்து போலீசில் புகார் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மூன்று நாட்களுக்குப் பின், அம்மாதுவை பிறந்த பேரகுழந்தையுடன் கண்டுபிடித்தனர். மேலும், தன்னுடைய காதலனுக்காக இவ்வாறு செய்தாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மேல் விசாரணைக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker