Latestமலேசியா

தலை கீழாக பறக்கவிடப்பட்ட  “ஜாலூர் ஜெமிலாங்” எதிர்பாராமல் நடந்தது ; அமீட் படோர் 

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – சமீபத்தில் பஹாங்கில் உள்ள ஒரு பள்ளியில் ஜாலூர் ஜெமிலாங் கொடியைத் தலைகீழாகப் பறக்கவிட்ட சம்பவம் எதிர்பாரா வகையில் நடந்த செயல் என  டத்தோ ஶ்ரீ  அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

இந்நிலையில், போலீஸ் தரப்பினர் விசாரிக்கையில் , அப்பள்ளியில் பணிபுரியும் அந்நிய நாட்டவர் கொடியை எப்படி தொங்கவிட வேண்டும் என தெரியாத பட்சத்தில், அந்த தவறை புரிந்ததாக  அப்துல் ஹாமிட் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் கொடியை அவமதிக்கும் நோக்கத்திலும் , எதிர்ப்பு தெரிவிக்கவும்  இச்சம்பவம் நிகழவில்லை; தவறான தகவல்களை பரப்பும் நோக்கில் , ஆதாரமற்ற அறிக்கைகளை எவரும் வெளியிட வேண்டாம்; அப்படி செய்யும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker